`என்னுடன் வந்துவிடு’ - திருமணம் மீறிய உறவால் நண்பனின் மனைவியை கத்தியால் குத்திய இளைஞர்

0

வேலூர், காட்பாடி கிளித்தான்பட்டறையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர், காந்தி நகரில் இயங்கிவரும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார். இந்தப் பெண்ணிற்கும், இவரின் கணவரின் நண்பரான காட்பாடி எல்.ஜி.புதூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. சந்தோஷ் கட்டட மேஸ்திரியாக வேலைப் பார்க்கிறார். அவருக்கும் திருமணமாகி அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அப்படியிருந்தும், நண்பரின் மனைவியையும் அவர் தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார். இதுபற்றி சமீபத்தில்தான் அப்பெண்ணின் கணவனுக்குத் தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்தவர் மனைவியையும், தனக்கு துரோகம் இழைத்த நண்பனையும் கண்டித்திருக்கிறார்.

நண்பனின் மனைவியை கத்தியால் குத்திய இளைஞர்

அதாவது `என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது, என் மனைவியிடமும் பேசக்கூடாது’ என்று நண்பனை எச்சரித்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை வேலைக்குச் சென்றுவிட்டு வீடுத் திரும்பிய நண்பனின் மனைவியை மறித்து, தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்திருக்கிறார் சந்தோஷ். அவர் உடன்செல்ல மறுத்ததால், ஆத்திரமடைந்த சந்தோஷ் மறைத்துவைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதில் சுருண்டு விழுந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுபற்றி விருதம்பட்டு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதால், போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிப்பிடித்து கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/CVGwb9W
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*