தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரின் மகன் தர்மசுதன், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் தர்மசுதன் பள்ளிக்கு சென்றுருக்கிறார். பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தர்மசுதனை ஆசிரியர் கண்டித்ததோடு வகுப்பறைக்குள் அமர வைத்திருக்கிறார். மதியம் 11 மணி அளவில் இடைவேளையின் போது மாணவ, மாணவிகள் அனைவரும் வெளியில் சென்றிருக்கின்றனர்.
ஆனால், தர்மசுதனை மட்டும் ஆசிரியர் விடவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு வந்த மாணவன் தர்மசுதன், தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளான். அவனிடம் பெற்றோர் விசாரித்தபோது, `தன்னை இடைவேளையின் போது ஆசிரியர் சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை' எனக் கூறி அழுதிருக்கிறான்.
உடனே தர்மசுதனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். ஆனால், பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகத்திற்குச் சென்று வட்டார கல்வி அலுவலரிடமும் கூறியிருக்கின்றனர். அங்கும் சரியான பதில் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்குச் சென்ற பெற்றோர், தர்மசுதனையும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தைக்கூறி சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் மனுவும் அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆசிரியர் மீது 4-ம் வகுப்பு மாணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/y2oUXJa
via
