புதுவையில் ஜி20 அறிவியல் 20 ஆரம்பநிலைக் கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குநர் ரங்கராஜன் வரவேற்றார். திட்டம் அறிவியல் 20-ன் இந்திய தலைமை பொறுப்பு பேராசிரியர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "உலகளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் மதிக்கும் பல நாட்டு விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமைக்குரியது. அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை.
சமூக சீர்திருத்தங்களுக்கும் அறவியல் உதவியிருக்கிறது. அறிவியலின் வளர்ச்சியல்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது. `அறிவியல், தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைத்து அமைதியை முன்னெடுக்கின்றன' என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கூற்று உலகின் எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. பலதரப்பு ஒத்துழைப்பு, நட்புறவுடன் புத்தாக்கங்களை உலகளவில் முன்னெடுக்க நாம் கூடியிருக்கிறோம். நமது எதிர்காலம் குறித்து விவாதிக்கவிருக்கிறோம். இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சி வசதிகளைப் பெற்று வளர்கிறது.
இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கிறது. பிறக்கும் குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறக்கின்றன. எதிர்கால தலைமுறைக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. நமது வீடுகள், வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிவிட்டது.
ஆனால் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்படுகின்றன. பெருமளவு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் காண வேண்டும். இங்கு நடைபெறும் கூட்டம் இனி நடைபெறும் கூட்டங்களுக்கு கருத்துவரைவை உருவாக்கும். அறிவியல் உச்சநிலை கூட்டம் கோவையில் நடத்தப்படும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/85DiWBV
via
