ரயில்வே பாதுகாப்புப்படை பெண்கள் உதவி; ஓடும் ரயில்களில் பிறந்த 209 குழந்தைகள்!

0

ரயில் நிலையங்களில் இதுவரை 17,756 சிறுவர், சிறுமிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை, ரயில்வே பாதுகாப்புp படையினர் செய்த பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையினர். படங்கள் - தே.தீட்ஷித்

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி எம்.கே. கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே சொத்துகளை பாதுகாக்கவும், ரயில் சேவை பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை சட்டம் 1957-ன் படி இந்திய அரசு ரயில்வே பாதுகாப்புப் படையை உருவாக்கியது. ரயில் நிலையங்களில், ரயில்களில் குற்றங்களை தடுக்க, பயணிகளை பாதுகாக்க, மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை பாடுபடுகிறது.

கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக விற்ற 5179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட 140 சட்டவிரோத மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.

ரயில்களில் ரூ. 80 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுவரை ரயில் நிலையங்களில் 17,756 சிறுவர் சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ 7.37 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

ரயில்

மேலும், 194 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு 559 அப்பாவிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயில்களில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை காப்பாற்றியுள்ளது.

ரயிலில் தவறவிடப்பட்ட ரூ 46.5 கோடி மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக 640 ரயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் கொண்ட `என் தோழி’ என்ற பெயரிலான குழுக்கள் பயணித்து வருகின்றன.

ஓடும் ரயில்களில் 209 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த தாய்மார்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் உதவிகரமாக இருந்துள்ளனர். முதியோர்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பயணத்தில் காயமடைந்தோர் என 37000 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டு சுதந்திரமான தேர்தல் நடைபெற உதவியுள்ளது.

மதுரை கோட்டத்தில் பயணச் சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ 15.44 லட்சம் மதிப்புள்ள பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகரிப்பு!

தடை செய்யப்பட்ட புகையிலையை ரயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ 2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு ரூ 24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

ரயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டு ரூ 9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையங்களில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சட்ட விதிகளை மீறிய 2701 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ 15.94 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4684 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ 9.66 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள் தவறவிட்ட ரூ 42.45 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயிலில் 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

குடியரசு நாளில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துகள்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Tmtyek4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*