குமரி: விடுதி மொட்டை மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை? ; சிக்கிய கடிதம் - போலீஸ் விசாரணை

0

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் சுமித்திரன் (19) என்பவர் 2-ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி பயின்று வந்திருக்கிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இவருடன் நான்கு மாணவர்கள் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் வகுப்புகள் முடிந்த நிலையில், மாலையில் தன் அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் சக மணவர்களிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சுமித்திரன்

ஜாலி டைப்பான சுமித்திரன் பேசாமல் அமைதியாக இருந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரிடம் என்ன பிரச்னை எனக் கேட்டிருக்கின்றன்ர். ஆனால், அவர் எதுவும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 1 மணியாளவில் சுமித்திரன் தன் அறையை விட்டு வெளியேறியிருக்கிறார். காலையில் சக மாணவர்கள் எழுந்து பார்த்தபோது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியிலிருந்த துணி காயப்போட பயன்படுத்தும் கயிற்றில், கட்டடத்தின் வெளியே தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் காணப்பட்டார்.

இது பற்றி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், மாணவர் அறையிலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றியதாக கூறயிருக்கின்றனர்.

இறந்த மாணவர் சுமித்திரன்

இது குறித்து போலீஸ் தரப்பில் , "கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்ததிலிருந்து மாணவர் டல்லாக இருந்ததாக கூறப்படுகிறது. மொட்டைமாடியில் துணி காயப்போடுவதற்காக கட்டிய கயிற்றை கழுத்தில் கட்டிவிட்டு மாணவர் குதித்திருக்கலாம் என கருதுகிறோம். விசாரணையில் ஒரு கடிதம் சிக்கியிருக்கிறது. அதில், `என்னால் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்க முடியவில்லை.

இந்த உலகில் நான் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னியுங்கள்' என கூறியிருக்கிறார். இது அவர் எழுதிய கடிதம்தானா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனக் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மாணவர் கொலைச்செய்யப்பட்டு, கயிற்றில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சிலர் சந்தேகத்தை கிளப்பியிருக்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/OCHQd3f
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*