"எந்தப் புரொமோஷனுக்கும், ரியாலிட்டி ஷோவுக்கும் என்னை அழைக்கவில்லை!"- `செவ்வந்தி' நிதின் கிரிஷ்

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'செவ்வந்தி'. இந்தத் தொடரில் ராகவ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் இறந்தது போல கதை நகர்ந்ததால் அவர் அந்தத் தொடரில் தற்போது நடிக்கவில்லை. அந்தத் தொடரில் கதாநாயகியாக திவ்யா ஶ்ரீதர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

'என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்திருந்த நிதின் கிரிஷ் என்பவர் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் 'செவ்வந்தி' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் அந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த விலகல் குறித்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவு செய்துவிட்டு, சில மணி நேரங்களிலேயே அதை நீக்கியிருக்கிறார். 

'செவ்வந்தி' நிதின் கிரிஷ்ஷின் ஸ்டோரி பதிவு

அந்தப் பதிவில், "எல்லாருக்கும் வணக்கம். கனத்த இதயத்துடன் செவ்வந்தி தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்திலிருந்து விலகியிருக்கிறேன். முக்கியக் கதாபாத்திரமான எனக்குக் கிடைக்க வேண்டிய ஸ்கிரீன் ஸ்பேஸ் கிடைக்கவில்லை. ஆக்டராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒரு மாதத்தில் 2, 3 நாள்களுக்கு மேல் நான் வேலையே செய்யவில்லை. எந்தப் புரொமோஷனுக்கும், ரியாலிட்டி ஷோவிற்கும் என்னை அழைக்கவில்லை. நான் வெளி ஆளாக உணர்கிறேன். ஆனாலும், திறமையான நல்ல எண்ணங்கள் கொண்ட நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். புரொடக்‌ஷன் தரப்பும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டது. புரொடக்‌ஷன் டீமிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இரண்டு முக்கியமான புராஜக்ட்ஸ் குறித்து விரைவிலேயே அறிவிக்கிறேன்!" எனப் பதிவிட்டிருந்தார். 

பிறகு அந்தப் பதிவை நீக்கிவிட்டு, "லீகல் காரணங்களுக்காக முந்தைய ஸ்டோரியை நீக்கிவிட்டேன். புது விஷயங்களை நோக்கி பயணிக்கும் தருணம். இரண்டு முக்கியமான அறிவிப்பை விரைவில் அறிவிக்கிறேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

'செவ்வந்தி' நிதின் கிரிஷ்ஷின் ஸ்டோரி பதிவு

ஏற்கெனவே பல நடிகர்கள் கதையின் போக்கு அவர்களுடைய கரியருக்கு உகந்ததாக இல்லை என்கிற காரணத்தினால் தொடரிலிருந்து விலகுவது வாடிக்கையாகிவிட்டிருக்கும் நிலையில் 'செவ்வந்தி' தொடர் நடிகரின் விலகலும் அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*