சென்னை கோயம்பேட்டை விடுங்க.. ஈசிஆரில் வருது புது பேருந்து நிலையம்.. தென் தமிழ்நாட்டு போவது இனி ஈஸி!

0

 


சென்னை
கோயம்பேட்டை விடுங்க.. ஈசிஆரில் வருது புது பேருந்து நிலையம்.. தென் தமிழ்நாட்டு போவது இனி ஈஸி!


சென்னை; சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) நெரிசல் மிகுந்த இடத்தின் அமைந்துள்ள மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக ECR இல் புதிய பேருந்து முனையத்தை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.



தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவே கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் செயல்பட உள்ளது.



இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, அடுத்த மாதம் நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்ததாரரை இறுதி செய்யும் என்று அறிவித்துள்ளது.



சிஎம்டிஏ அமைச்சர் பி.கே சேகர் பாபு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டினருக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்தாலும், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.



அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



செங்கல்பட்டு: ஏற்கனவே சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. செங்கல்பட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் இங்கே அமைக்கப்பட உள்ளது.



சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பலர் இதனால் செங்கல்பட்டில் வசிக்க விரும்பி வருகிறார்கள். இதனால் அங்கே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கே பேருந்து நிலையத்தை புதிதாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.


( ஈசிஆர் அடியோடு மாறுது.. ரூ.25 கோடியில் வருது பிரம்மாண்ட வசதி.. குஷியில் இளசுகள்.. என்னன்னு பாருங்க)


செங்கல்பட்டில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெண்பாக்கம் ஊராட்சி அருகே 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் விரைவில் இது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க.....


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*