அண்ணாமலை பேச்சைக்கேட்டு வானதி கொடுத்த ரியாக்ஷன்
”பாஜகவை மக்கள் ஏற்பார்களா என்பது ஜூன் 4 - ஆம் தேதி தெரியும்!” - நயினார் நாகேந்திரன் | BJP
இந்நிலையில், கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சவுமியா அன்புமணி, வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார் எனத் தெரிவித்தார். மேலும், சவுமியா அன்புமணி அவரது பேத்திக்கு திருமணம் முடிந்த பின்பு தான் அரசியலுக்கு வந்து இருப்பதாக அண்ணாமலை கூறினார். இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சற்றே குழப்பம் அடைந்தனர்.
கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தகவலுக்காக…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
Exclusive: பிரதமரின் சாதனை... அண்ணாமலையின் யாத்திரை கூடுதல் பலம்: வானதி சீனிவாசன் ஓபன் டாக்
விளம்பரம்
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பே 19 சதவீத வாக்குகளை பெற்று, பாஜக தனது கூட்டணி பலத்தை நிரூபித்துள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் களம் 18 நிகழ்ச்சியில், ஆசிரியர் கார்த்திகைச் செல்வனுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், தமிழ்நாடு அரசியல் களம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலேயே பாஜக வலுவான கூட்டணி அமைத்தது. 2014 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்த பாஜக, 5 தொகுதிகளில் 2ஆவது இடம் பிடித்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே 19% வாக்குகளை பெற்றிருந்தது பாஜக கூட்டணி.
விளம்பரம்
2024 தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளோம். பிரதமரின் சாதனை, அண்ணாமலையின் யாத்திரை பாஜகவின் வெற்றிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
”அரசியல் என்பது பெண்களுக்குக் கூடுதல் சவால் நிறைந்தது”
தற்போது வெற்றிவாய்ப்பு திமுக, அதிமுகவுக்கானதாக இருக்காது. பாஜகவின் எதிர்ப்பை தற்போது ஆதரவாக மாற்றி வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அரசியல் என்பது பெண்களுக்குக்கூடுதல் சவால் நிறைந்தது. நல்ல பெண் வேட்பாளர்களை களமிறக்குவதில் பல தடைகள் உள்ளன. அரசியல் சாதிக்க பெண்கள் தங்களை தகவமைக்க வேண்டும். அரசியலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் கட்சி பாஜக. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

.jpeg)