சௌமியா அன்புமணி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வேட்புமனுவில் தகவல்
தனது பெயரில் 9 கோடியே 15 லட்ச ரூபாய்க்கு வங்கிகளில் கடன் இருப்பதாக சவுமியா அன்புமணி தகவல் அளித்துள்ளார்.
சௌமியா அன்புமணி
"அயோத்தியில் ராமர் கோயில் அமைத்தது பெருமிதத்திற்கு உரியது" - கைதட்டி வரவேற்ற பிரதமர் மோடி
மத்திய அமைச்சர் பதவிக்கு ஸ்கெட்ச் போடும் திமுக.. | DMK | Parliament Political decision 2024 |
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா. ம. க. சார்பில் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி ண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி. மு. க. கூட்டணி, அ. தி. மு. க. கூட்டணி, பா. ஜ. க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
பா. ஜ. க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தொகுதியில் பா. ம. க. வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களமிறங்கியுள்ளார்.
பா. ஜ. க. கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா. ம. க. வேட்பாளர் சவுமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தியிடம், சவுமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவில், சவுமியா அன்புமணி தனது பெயரில் 48 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் 6 லட்சத்துத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சவுமியா அன்புமணி தனது பெயரில் 12 கோடியே 5 லட்ச ரூபாய் அசையும் சொத்துக்களும், தனது கணவர் அன்புமணி பெயரில் 67 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் 9 கோடியே 15 லட்ச ரூபாய்க்கு வங்கிகளில் கடன் இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
எல்.முருகன் பெயரில் 20 லட்ச ரூபாயும், அவரது மனைவி பெயரில் 1 கோடி ரூபாய் வங்கி கடனும் இருப்பதாக வேட்புமனுவில் தகவல்.
விளம்பரம்
எல்.முருகன்
எல்.முருகன்
நீலகிரியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். பாஜகவினருக்கு காலை 10 மணிக்கும், அதிமுகவினருக்கு 11 மணிக்கும் காவல்துறையினர் நேரம் ஒதுக்கி இருந்தனர். பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இரு கட்சித் தொண்டர்களும் மாறிமாறி கோஷமிட்டனர்.
பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்தவுடன் ஊர்வலம் தாமதமாக தொடங்கியது. பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்பு மனுவுடன் தனது சொத்து விபரத்தையும் தாக்கல் செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
வங்கி கணக்கு, தங்க நகைகள், எல்.ஐ.சி பாலிசி உள்ளிட்ட 1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துகளும்,
மனைவி பெயரில் 88 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துக்களும் இருப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
முருகன் பெயரில் 69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், முருகனின் மனைவி பெயரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்கள் முருகன் பெயரில் 20 லட்ச ரூபாயும், அவரது மனைவி பெயரில் 1 கோடி ரூபாய் வங்கி கடனும் இருப்பதாக வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

.jpeg)