Cooku with Comali: விஜய் டிவியில் குக்காக கமிட்டானதால் ஜீ தமிழ் தொடரிலிருந்து விலகும் நாயகன்!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `இந்திரா'. இந்தத் தொடரின் நாயகன் அக்‌ஷய் கமல். இவர் ஏற்கெனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான `இரட்டை ரோஜா' தொடரில் நடித்திருந்தார். தற்போது அக்‌ஷய் கமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `குக்கு வித் கோமாளி' சீசன் 5-ல் குக்காகக் கலந்து கொண்டிருக்கிறார்.
அக்‌ஷய்

அக்‌ஷய் தொடர்ந்து `இந்திரா' தொடரில் நடிப்பாரா என அவருடைய ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அது குறித்தத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அக்‌ஷய் கமல் விஜய் டிவியில் கமிட்டாகி இருப்பதால் அவரால் தொடர்ந்து `இந்திரா' தொடரில் நடிக்க முடியாது. எனினும் தற்போது தொடருக்குப் பொருத்தமான கதாநாயகன் செட் ஆகாததால் தற்போது வரையில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வேறொரு கதாநாயகன் உறுதியான பின்னர், அவர் அந்தத் தொடரிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. அப்படி விலகினால் அக்‌ஷய் அது குறித்து நிச்சயம் அவருடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். 

அக்‌ஷய் கமல்

அதே போல ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சண்டக்கோழி' தொடரிலிருந்து அந்தத் தொடரின் நாயகன் நியாஸ் கான் விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் அந்தத் தொடரில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்குப் பதிலாக `பூவே பூச்சூடவா' மதன் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. 



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*