
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாளத் திரையுலகை உலுக்கியது. மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பெரிய முகங்கள் சிக்கலைச் சந்தித்து வருகின்றன.
ஹேமா கமிட்டி போலப் பிற துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ் சினிமாவிலும் பாலியல் புகார்கள் இருப்பதாகவும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரையுலகினர் வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
நடிகர் விஷால், நடிகை ராதிகா, சமந்தா, கஸ்தூரி, உள்ளிட்ட திரைத்துறையினர் தமிழ் சினிமாவிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பியிருக்கின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தமிழ் நடிகர்கள்!
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்வியை எதிர்கொண்ட நடிகர்கள் சிலர் நேரடியாகப் பதிலளிக்கத் தவறியிருக்கின்றனர்.
தேனியில் கடை திறப்பில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, "தமிழ் திரைத்துறையில் அப்படி எதுவும் இல்லை... நல்ல விஷயத்துக்கு வந்திருக்கிறோம். அறிவு இருக்கா" எனப் பத்திரிகையாளரிடம் கோபப்பட்டார்.
மெய்யழகன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி, "இது அதற்கான மேடை அல்ல" என்றார்.
.png)
நடிகர் அர்ஜுன் 'மார்டின்' படச் செய்தியாளர் சந்திப்பில், “எல்லா துறைகளிலும் இது போன்ற பிரச்னைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு நீதிமன்றம் மூலமாகத்தான் தண்டனை கிடைக்க வேண்டும். நிறையப் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அதே சமயம் தவறாகக் குற்றம் சுமத்தும் பெண்களும் இருக்கிறார்கள்” என்றார்.
நடிகர் ரஜினிகாந்த், "அது குறித்து எனக்குத் தெரியாது" எனப் பதிலளித்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீசாகும் விஜய்யின் GOAT பட இயக்குநர் வெங்கட் பிரபு என்.டி.டி-விக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இது குறித்துப் பேசியுள்ளார்.
"இனியாவது தமிழ் சினிமா தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டியது அவசியம்.
தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றம் செய்வதற்கு முன் பயம் வரும்." என்றார்.
மேலும், "சினிமா போலவே மீடியா, ஐ.டி, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்." எனவும் பேசியிருக்கிறார்.
from விகடன்
Umn news
