திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான தடை நீட்டிப்பு... காரணம் என்ன?

0

கொரோனா தொற்றுக் காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுவருகிறது. தொற்றின் வீரியம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகின்றன. அண்ணாமலையாரை தரிசிக்க வெளிமாநில பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வருவதால், கிரிவலம் செல்வதற்கான தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கவில்லை.

கிரிவலம்

இந்த நிலையில், மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம், நாளை மாலை 3.49 மணி முதல் 27-ம் தேதி மதியம் 2.42 மணி வரையாகப் பார்க்கப்படுகிறது. இந்த பௌர்ணமிக்காவது கிரிவலம் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பக்தர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், இந்த கிரிவலத்துக்கும் தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், பக்தர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுதொடர்பாக, ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகத்தில், கொரோனாத் தொற்று குறைந்து வந்தாலும் கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துவருகிறது.

கிரிவலம்

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு அனுமதி அளித்தால் பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் மூலம் மீண்டும் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நாளை மாலை 3.49 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2.42 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு திருவண்ணாமலைக்கு வர வேண்டாம். இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bwjEOM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*