திண்டுக்கல்: `தேன்மொழி என்றாலே தி.மு.க-வுக்கு பயம்!’ - நத்தம் விஸ்வநாதன் கிண்டல்

0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க’வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தேன்மொழி, கடந்த வாரம் தனது பிரசாரத்தை துவங்கினார். இந்நிலையில், கூட்டணிக் கட்சியினரை அழைத்து, நிலக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளருமான நந்தம் விஸ்வநாதன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Also Read: திண்டுக்கல் : `என் கட்சிக்கு லீவு விட்டுட்டேன்!’ - நிலக்கோட்டை தி.மு.க கூட்டணி வேட்பாளர் பேச்சு

கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், “தேன் மொழி என்றாலே தி.மு.க’விற்கு தோல்வி பயம் வந்துவிடும். அதனால் தான், யாரும் கேள்விப்படாத ஒரு கட்சிக்கு நிலக்கோட்டைத் தொகுதியை ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். தேன்மொழி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலைக்கு ஒரு நாள் ஓட்டு போட்டீர்கள் என்றால், ஐந்தாண்டுகளுக்கு சந்தோசமாய் வாழலாம்” என்றார்.

முருகவேல்ராஜன்

நிலக்கோட்டைத் தொகுதியில் தி.மு.க சார்பில், அதன் கூட்டணிக் கட்சியான, மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகவேல் ராஜன் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நிலக்கோட்டை தொகுதியில் உள்ள தி.மு.க கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த முருகவேல் ராஜன், தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம், “என் கட்சிக்கு லீவு விட்டுட்டேன். தி.மு.க வேட்பாளராகவே களம் இறங்கி தேர்தலை சந்திப்பேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் பற்றி, நத்தம் விஸ்வநாதன் கிண்டல் செய்திருப்பது, தி.மு.க நிர்வாகிகளை கொதிப்படையச் செய்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rTzCJR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*