ஜெயலலிதா வழிபட்ட கோயில்... நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் பழனிசாமி மனைவி!

0

கும்பகோணம் அருகே உள்ள கோயில் ஒன்றில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவியான ராதா கலந்து கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழிபட்ட இக்கோயிலில் முதல்வரின் மனைவி வழிபட்டுள்ளது அரசியலில் கவனிக்கும் விஷயம் ஆகியுள்ளது.

யாக பூஜையில் எடப்பாடி பழனிசாமி மனைவி

கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடியில் பிரசித்தி பெற்ற பிரத்தியங்கிராதேவி கோயில் அமைந்துள்ளது. தனியார் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசை தோறும் நிகும்பலா என்கிற சிறப்பு யாகபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த யாகத்திற்கு முக்கிய பொருளாக மிளகாய் பயன்படுத்தப்படு வழக்கம்.

இந்த யாக பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் வீழ்வார்கள, வெற்றி கிடைக்கும், இழந்த செல்வத்தை மீண்டும் அடையலாம் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை தினத்தில் நடைபெறும் யாகபூஜையில் பல்வேறு அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகத்தில் நாட்ட கொண்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.

யாக பூஜை

கடந்த அமாவாசையின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இங்கு வந்து நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டார். சசிகலா நினைத்தது நடக்கவே அவர் இந்த பூஜையில் கலந்து கொண்டதாக அ.தி.மு.கவினர் மத்தியிலேயே பேசப்பட்டது அப்போது விவாதத்துக்கும் உள்ளாகியது.

இந்நிலையில் மாசி அமாவாசையான இன்று நடைபெற்ற நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதா கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. ஏப்ரல் 6 -ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் தனது கணவர் தலைமையிலான ஆட்சி அமையவும், எதிரிகள் படுதோல்வி அடையவும், ராதா நிகும்பலா பூஜையில் கலந்து கொண்டதுடன் சிறப்பு தரிசனம் செய்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `பிரித்தியங்கிரா தேவி கோயிலில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜை ரொம்பவே பிரசித்தி பெற்றது. இந்த யாக பூஜையில் முக்கிய பொருளாக மிளகாய் பயன்படுத்துவர். யாக குண்டத்தில்கொழுந்து விட்டு எரியும் தீயில் மிளகாயினை போடுவர்.

இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் வீழ்ந்து விடுவார்கள், வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடும், இழந்த செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து செல்லும் பலருக்கு இது போல் நடந்திருப்பதால் கோயிலுக்கும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா - சசிகலா

குறிப்பாக பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வந்து நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பிறகே இந்த கோயில் மிகவும் பிரபலமானது. அத்துடன் கோயிலுக்கு வந்து சென்ற பிறகு மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சி அமைவதற்கும் வாய்ப்பு உண்டானது.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவியான ராதா நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டதுடன் சிறப்பு தரிசனம் செய்து விட்டு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் என்பது ரொம்பவே முக்கியத்துவமானது.

கோயில் பூஜையில் ராதா

இதில் வெற்றி பெற்று தன்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய பெரும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியான தி.மு.க எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என கூறி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Also Read: சசிகலாவுக்காக யாக பூஜையில் கலந்துகொண்டாரா ராஜேந்திர பாலாஜி? - கும்பகோணம் பரபரப்பு

சசிகலா அரசியலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்து விட்டு என்னதான் நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். டி.டி.வி தினகரன் தன் பங்கிற்கு அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்களை அறிவித்திருப்பதுடன் பிரசார பணிகளிலும் வேகம் காட்ட தொடங்கியுள்ளார்.

பூஜை

அ.தி.மு.கவிலும் பலர் தனக்கு எதிராக செயல்பட கூடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெற்று மீண்டும் தன் தலைமையிலான ஆட்சி அமைப்பதற்காக பழனிசாமி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். தன்னுடைய கணவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்க வேண்டும் மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி ராதா பிரித்தியங்கிரா தேவி கோயிலுக்கு வந்து நிகும்பலா பூஜையில் கலந்து கொண்டு மனமுருகி வேண்டி கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நேரத்தில் இக்கோயிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தால் பெரும் பரபரப்பு உண்டாகும் என்பதால், தான் மட்டும் தனியாக வந்து யாக பூஜையில் கலந்து கொண்டார். அரசியல் எதிரிகள் வீழ்ந்து விடுவார்கள், தன் கணவர் நிச்சயம் வெற்றியடைவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் ராதா வந்து சென்றுள்ளார். அவரின் வேண்டுதல் பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரிய வரும்’ என்றனர். இதே போல் பி.ஜே.பியின் மாநிலத் துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தனக்கு சீட் கிடைக்க வேண்டும் என தனது குடும்பத்துடன் சென்று யாக பூஜையில் கலந்து கொண்டதும் குறிப்பிடதக்கது.

Also Read: எடப்பாடி கே பழனிசாமி வாழ்க்கை வரலாறு: வெல்ல வியாபாரம் டு முதல்வர் பதவி - முழுமையான தொகுப்பு



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bEPHxn
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*