கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் வருமானத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தினக் கூலி வேலைக்கு செப்லபவர்கள், அடிதட்டு மக்கள் பயன்பெறும் வகையில் லாக்டெளன் முடியும்வரை தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்த செலவில் உணவு வழங்கு வதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்.
கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.இங்கு காலையில் டிபன் மதியம் தயிர்,சாம்பார்,எலுமிச்சை,புளி உள்ளிட்ட சாதங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் காலை, மதியம் என இரண்டு வேளை உணவுக்கான செலவை வழங்கி வருகிறார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரவும் உணவும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி தினமும் இரவு டிபன்,மதியம் காய்கறி கூட்டுடன் சேர்த்து சாதம் வழங்குவதற்கு தேவைப்படும் பணத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3obaNIj
via
