புதுச்சேரி: ’மதுபாட்டில்கள் இனி டோர் டெலிவரி!’ -அனுமதி வழங்கிய அரசு!

0

புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்திருக்கிறது அரசு. குறிப்பாக அனைத்து விதமான மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில் நேற்று மாலை மதுக்கடை உரிமையாளர்களுடன் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ’மதுக்கடைகளில் அனைவரும் சமூக இடைவெளியை கடக்க வேண்டும். மது வாங்க வருபவர்கள் மட்டுமல்லாமல் மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மது வகைகள் டோர் டெலிவரி

இந்த விதிகளை பின்பற்றாத மதுக்கடைகளின் உரிம்ம் சஸ்பெண்ட், ரத்து செய்யப்படும் என்று கலால்துறை கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் மதுக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை துவக்கியிருக்கின்றனர் மதுக்கடை உரிமையாளர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3co48WM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*