கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு இருக்கும் தயக்கங்களைப் போக்கி அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், அதை முடக்கும் நோக்கில் சிலர் தடுப்பூசி குறித்து ஆதாரமற்ற அல்லது போலியான விஷயங்களைத் தொடர்ந்து பரப்பிவருகின்றனர். அந்த வகையில், ``கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ வாய்ப்பில்லை” என்று நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மான்டாக்னியர் (Luc Montagnier) தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் காட்டுத்தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
ஹெச்.ஐ.வி கண்டுபிடிப்புக்காக 2008-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசின் கூட்டுப் பெறுநராக Françoise Barré-Sinoussi and Harald Zur Hausen என்றவருடன் லூக் மான்டாக்னியர் இருந்தார். இருப்பினும், அவர்மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருந்ததால் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படிப் பல சர்ச்சைகளில் சிக்கிய லூக் மான்டாக்னியர் கடந்த ஆண்டு, ``கோவிட்-19 இயற்கையாக உருவானதல்ல. சீன ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது” என்று கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கினார். ஒருசிலரால் இப்படியான கூற்றுகள் முன்வைக்கப்பட்டாலும் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து இன்னும் ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
அவ்வப்போது கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தன் கருத்துகளை முன்வைத்து வரும் லூக் மான்டாக்னியர் தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர் என்றும் ஹோமியோபதியை ஆதரிப்பவர் என்றும் கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டில், சில தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குவதற்கான பிரெஞ்சு அரசாங்கத்தின் முடிவை லூக் மான்டாக்னியர் எதிர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், ``தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிடுவார்கள். தொற்றுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களும் உயிர்வாழ வாய்ப்பில்லை என்பதை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான வைராலஜிஸ்ட் லூக் மான்டாக்னியர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைக் காப்பாற்ற எந்தச் சிகிச்சையும் இல்லை” என்று ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது.
An image allegedly quoting a French Nobel Laureate on #COVID19 vaccines is circulating on social media
— PIB Fact Check (@PIBFactCheck) May 25, 2021
The claim in the image is #FAKE. #COVID19 Vaccine is completely safe
Do not forward this image#PIBFactCheck pic.twitter.com/DMrxY8vdMN
அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் அதை ஃபார்வேர்டு செய்தனர். இந்தச் செய்தி உண்மை என நம்பி மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், அந்தச் செய்தியில் உண்மை இல்லை. அதை லூக் மான்டாக்னியரும் கூறவில்லை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பெருந்தொற்றின்போது தடுப்பூசி போடுவதை நினைத்தே பார்க்கக் கூடாது. அது தொற்று வலுவடைய உதவுவதுடன், புதிய வைரஸ் வேரியன்ட்டுகள் உருவாகவும் காரணமாகும் என்றுதான் மான்டாக்னியர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அது வேறு மாதிரி திரிக்கப்பட்டு, தவறான தகவலாகப் பரவி வருகிறது. ``வாட்ஸ் அப்பில் பரவும் அந்தச் செய்தி உண்மை இல்லை. அது முற்றிலும் போலியான செய்தி. கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை. எனவே, இந்தச் செய்தியை யாருக்கும் பகிர வேண்டாம்” என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB - Press Information Bureau) தெரிவித்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z4NYei
via
