108 திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று கள்ளழகர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிக் காட்சி தந்தார். அப்போது பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்திப் பாராயணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள அருள்மிகு பதினெட்டான்படி கருப்பணசுவாமி சந்நிதியில் உள்ள கதவுகளுக்கு சந்தன காப்பு வைபவம் நடைபெற்றது.
கள்ளழகர் கோயிலிலிருந்து மாலை கொண்டுவரப்பட்டு கதவுகளுக்கு சாத்தப்பட்டது. தொடர்ந்து பதினெட்டான்படி கருப்பணசுவாமி சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் கடந்த ஆடி பௌர்ணமி அன்று கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜைகள் நடத்தப்பட்டன.
ஆடி அமாவாசை நாளில் கதவுகளுக்கு மட்டும் சந்தனகாப்பு நடத்தி தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
கொரோனா கட்டுப்பாட்டால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வழக்கமான முறையில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் அனிதா மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VtOeVD
via
