கோவை, தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி. கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது, தமிழ்நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஈஸ்வரி.
Also Read: பால்ய திருமணம் முதல் ஃபர்ஸ்ட் லேடி விருது வரை... பெண் டிரைவர் நிகழ்த்திய சாதனை!
மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் விநியோகிஸ்தரான சாரு சிண்டிகேட் நிறுவனம், பெண்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவர்கள்தான் அங்காள ஈஸ்வரிக்கும் பயிற்சி அளித்துள்ளனர்.
இதுகுறித்து அங்காள ஈஸ்வரி கூறுகையில், ``கனரக வாகனம் ஓட்ட வேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால், எனக்கு அதைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புகூட கிடைத்ததில்லை. சாரு சிண்டிகேட் குறித்து கேள்விப்பட்டு, அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
பொதுவாக, இதைப் பெண்கள் யாரும் ஓட்ட மாட்டார்கள். ஆனாலும், எனக்கு நம்பிக்கையளித்துப் பயிற்சியும் வழங்கினர்.
இப்போது என்னால் ஒரு நாளுக்கு ரூ.1,000 சம்பாதிக்க முடியும். தமிழ்நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன். இது என்னைப்போன்ற எளிய குடும்பத்துப் பெண்களுக்குப் பெரிய விஷயம். இதேபோல மற்ற பெண்களும் பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க முன்வரவேண்டும்.
Also Read: 11 வயதில் 70 உலக சாதனை; `இளம் யோகா டீச்சர்' பட்டம்; யோகாவில் கலக்கும் சிறுமி பிரிஷா!
பெண்கள் எதற்காகவும் கலங்கி நிற்கக் கூடாது. தன்னம்பிக்கையோடு இறங்கி முயற்சி செய்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3imUbMA
via
