புதுச்சேரி: `பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பா?’ - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

0

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை துவங்கியபோது அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொற்றின் எண்ணிக்கை குறையத் துவங்கியதும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் சில நாள்கள் வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா இரண்டாவது அலை துவங்கியதும் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது இரண்டாவது அலை குறையத் தொடங்கியிருப்பதால் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

புதுச்சேரி

Also Read: புதுச்சேரி ஊரடங்கு நீட்டிப்பு : `திரையரங்கம், பார் மேலும் எவற்றுக்கெல்லாம் அனுமதி ?'

கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் தொற்று முழுமையாக குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, ``அண்டை மாநிலங்களான தமிழகத்திலும், கேரளாவிலும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம்'' என்று சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், ``பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம். கொரோனா தொற்றின் மூன்றாவது அறை எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் தற்போது மூன்று குழந்தைகள் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 லட்சம் மக்கள் தொகையில் 5,65,000 பேர் முதல்கட்ட தடுப்பூசியையும், 1,46,000 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

Also Read: புதுச்சேரி: ``மக்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்!" - தரையில் அமர்ந்து குறைகேட்ட அமைச்சர்!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்களை நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். பள்ளிகள் திறப்பது குறித்து கவர்னர், முதல்வர் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். தற்போதைய நிலவரப்படி அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்கும் எண்ணம் இல்லை” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VcmrsC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*