யாஷிகா ஆனந்த் : வீட்டுக்குப் போகவே பயமா இருக்கு... டிஸ்சார்ஜ் பண்ணியும் ஆஸ்பிட்டல்லதான் இருக்கேன்!

0

கிழக்கு கடற்கரைச் சாலையில் கோரமான விபத்தில் சிக்கி தோழியை இழந்திருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உடல் நிலை முன்னேறியிருக்கும் நிலையில் நடிகை யாஷிகாவிடம் பேசினேன்.

''அடுத்த 5 மாசத்துக்கு என்னால எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாது. நாள் முழுக்க படுத்த படுக்கையாத்தான் இருக்கேன். எந்த பக்கமும் திரும்ப முடியல. முதுகுலயும் காயம் இருக்கு. ஆனா, எப்படியோ முகம் மட்டும் தப்பிச்சிருச்சு.

யாஷிகா ஆனந்த்

இப்போ உடம்புல வலி கொஞ்சம் கம்மியாகிடுச்சு. ஆஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க. ஆனா, நான் வீட்டுக்கு போகல. இங்கேயே தனிமைப்படுத்திட்டு இருக்கேன். வீட்டுக்கு போனா ஃப்ரெண்ட் ஞாபகமா இருக்கும். ஏன்னா, விபத்துக்கு முன்னாடி அவ எங்க வீட்டுலதான் தங்கியிருந்தா. அவ இருந்தப்போ வீடு அவ்ளோ கலகலனு இருந்தது. என் மேல அவ்ளோ பாசமா இருந்தா. அப்படிப்பட்டவளை நான் இழந்துட்டேன்.

இப்ப வீட்டுக்குப் போகவே பயமா இருக்கு. இந்த சூழல்ல வீட்டுக்குப் போனா, அவ ஞாபகங்கள்தான் திரும்பத் திரும்ப வரும். இங்க ஆஸ்பிட்டல்ல நர்ஸ்களும், எங்க வீட்ல இருக்கவங்களும் சேர்ந்து என்னை கவனிச்சிக்கிறாங்க. இது எனக்கு மறுபிறப்பு. அந்த விபத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வர ட்ரை பண்றேன். முடியுமான்னு தெரியல'' எனக் கலங்குகிறார் யாஷிகா ஆனந்த்.



from தமிழ் சினிமா https://ift.tt/3lCKknW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*