தமிழகம் முழுவதும், இளைஞர் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துவருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வலி நிவாரணி மாத்திரைகளைப் போதைக்கு பயன்படுத்தி இளைஞர்கள் சீரழிவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, போதை மாத்திரைகளை சப்ளை செய்த கும்பலை அதிரடியாகப் பிடித்து கைது செய்தது.
தற்போது மாவட்டத்தில் மீண்டும் அதே போல் இளைஞர்கள் போதைப்பொருட்கள் உபயோகப்படுத்திச் சீரழிவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து புதுக்கோட்டை நகர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள், அதனைப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய மாவட்ட எஸ்பி. நிஷாபார்த்திபன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
எஸ்.பியின் உத்தரவையடுத்து போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், திருக்கோகர்ணம் போலீஸார் அங்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம், தனசேகர்,சக்திவேல் ஆகிய 3 இளைஞர்கள் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்ததும், அதோடு, அதனை இளைஞர்களிடம் விற்பனை செய்ததையும் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த திருக்கோகர்ணம் போலீஸார், அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3BjZiEd
via
