வாக்குப்பதிவு மந்தம்; ஆர்வம் காட்டாத மக்கள்! - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நிலவரம்

0

வேலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நான்கு ஒன்றியங்களிலும் மதியம் 3 மணி நிலவரப்படி 52.32 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் நான்கு ஒன்றியங்களிலும் மதியம் 3 மணி நிலவரப்படி 41.24 சதவிகித வாக்குகளே பதிவாகியிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 3 ஒன்றியங்களிலும் சேர்த்து மதியம் 3 நிலவரப்படி 49.70 சதவிகித மக்கள்தான் வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது.

வாக்குச்சாவடி மையங்களை சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் பார்வையிடுகிறார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்.

அதிலும், மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வாக்களிப்பதற்கான நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, 50 சதவிகித வாக்குகளே பதிவாகியிருக்கும் சூழலில் இன்னும் சில நிமிடங்களுக்குள் குறைந்தபட்ச வாக்குகளே பதிவாகும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கருதுகிறார்கள். வாக்குப்பதிவு தொடங்கிய காலைநேரம் பொதுமக்கள் விறுவிறுப்பாக வந்து ஜனநாயகக் கடமையாற்றினர். அதன் பிறகு நேரம் செல்ல செல்ல வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் வருவது குறைந்து மந்தமான நிலையே காணப்படுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Dlg5HL
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*