இளையராஜா இசை; நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு; விஷாலின் இயக்கம்; மறுபடியும் துப்பறிவாளன் 2 ?!

0

இயக்குநர் மிஷ்கினும், விஷாலும் நட்புடன் பழகியபோது எடுக்கப்பட்ட படம் துப்பறிவாளன். அந்தப் படத்திற்கு கிடைத்த பரவலான கவனம், மேக்கிங் ஸ்டைல் என சினிமா ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. நேரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஷால் இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்த வெர்ஷனுக்கு வாய்ப்பு உண்டா என்று விஷால் இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டார். உடனே மிஷ்கின் லண்டனுக்குப் போய் லொகேஷன் பார்த்து ஸ்கிரிப்ட் எழுத துப்பறிவாளன் 2 கதை தயாரானது. விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கம் என அறிவிப்பும் வெளியானது.

துப்பறிவாளன் 2

பிறகு படப்பிடிப்புக்கு கிளம்யியது விஷால், மிஷ்கின் உள்ளிட்ட படப்பிடிப்பு நடந்தபோது மிஷ்கின் - விஷால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது உச்சத்திற்கு போய் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இப்போது தனியாக ஸ்கிரிப்டை விஷால் எழுதி அடுத்தாண்டு ஏப்ரல் 22 முதல் லண்டனில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. பழைய ஸ்கிரிப்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு புது ஸ்கிரிப்ட் எழுதிவிட்டார் விஷால். பழைய இயக்குநர் குழு கலைக்கப்பட்டு புதுக்குழு வந்துவிட்டது. நீரவ்ஷா கேமராவை கையாளுகிறார். இதில் வெற்றி அடைந்தே தீருவேன் என்று துடிப்போடு விஷால் கிளம்ப, மர்மப்புன்னைகையோடு காத்திருக்கிறார் மிஷ்கின்.



from தமிழ் சினிமா https://ift.tt/3EuT7in
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*