கார்த்தியின் `விருமன்' படத்தில் இடம்பெறும் பென்னிகுவிக் சிலை... தேனியில் நிறைவடைந்த படப்பிடிப்பு!

0
'கொம்பன்' முத்தையாவுடன் கார்த்தி மீண்டும் கூட்டணி அமைத்து நடித்து வரும் படம் 'விருமன்'. இதில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், மனோஜ் பாரதிராஜா, கருணாஸ், சூரி, ராஜ்கிரண் எனப் பலரும் நடிக்கின்றனர். தேனி பகுதிகளில் ஆரம்பித்த இதன் ஷூட்டிங் இப்போது நிறைவடைந்துவிட்டது.
விருமன் அதிதி ஷங்கர்

தேனி பகுதியில் பிரமாண்ட திருவிழா செட் அமைத்து, பாடல் காட்சியும் படமாக்கியுள்ளனர். தவிர, ஹீரோ கார்த்தியின் வீடு, ஒன்று ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்டது. அதைவிட இன்னொரு செட் ஆன வீச்சரிவாளுடன் கூடிய அய்யனார் கோயில் தேனி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த சுற்றுவட்டார மக்களின் விவசாய, குடிநீர் தேவைக்களுக்காக முல்லை பெரியார் அணையை கட்டிய ஆங்கிலேயர் கலோனல் ஜான் பென்னிகுவிக்கின் ஐந்தரை அடி உயர சிலை ஒன்றும் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்தபோது, பலரும் அந்த சிலையின் நேர்த்தியை பார்த்து வியந்துள்ளனர்.

விருமன் பட செட்

இப்படத்தில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர், 'விருமன்' படம் தொடங்கப்படுவதற்கு முன்பே தேனியில் சில வாரங்கள் தங்கியிருந்து அங்குள்ள மக்களிடம் பழகி ஹோம் ஒர்க் செய்திருக்கிறார்.

மதுரை, தேனியைத் தொடர்ந்து இதன் இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும் நடக்கிறது. சூர்யா தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3247vjl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*