வாணியம்பாடி மகேஸ்வரி வழக்கு... தாலுகா காவல் நிலையப் போலீஸார் 30 பேர் கூண்டோடு இடமாற்றம்!

0

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கால் நூற்றாண்டுக்காலமாக சாராய சாம்ராஜ்ஜியத்தை நடத்திவந்த மகேஸ்வரி குறித்து, 13.04.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்!’ என்ற தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான ஏப்ரல் 9-ம் தேதி காலையிலேயே கட்டுரையின் தாக்கம், திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறையை உலுக்கியெடுத்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனே மகேஸ்வரியைக் கைதுசெய்ய, களமிறங்கினார். போலீஸாரின் நகர்வுகளை தெரிந்துகொண்ட மகேஸ்வரி, குடும்பத்தோடு திருவண்ணாமலைக்குத் தப்பிச் சென்று, நளினி என்ற பெண்ணின் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கவர் ஸ்டோரி

அப்போதும் விடாத போலீஸ் டீம், ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவு அந்த வீட்டைச் சுற்றிவளைத்து மகேஸ்வரி, அவரின் கணவர் சீனிவாசன், மகன்கள் சின்ராசு, தேவேந்திரன், மகேஸ்வரியின் அக்காள் மகள் உஷா, சீனிவாசனின் தங்கை மகன் மோகன் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நளினி ஆகிய ஏழு பேரையும் கைதுசெய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தது. ஜூ.வி கட்டுரையின் எதிரொலியால், ஒரே நாளில் மகேஸ்வரியின் கூட்டம் கூண்டோடு பிடிக்கப்பட்ட சம்பவம், அவரின் கட்டுப்பாட்டிலிருக்கும் நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரிப் பகுதி மக்களை நிம்மதி அடையவைத்திருக்கிறது.

இந்த நிலையில், மகேஸ்வரியின் சாராய விற்பனையைத் தடுக்காத வாணியம்பாடி தாலுகா காவல் நிலையப் போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வேலூர் நில அபகரிப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பிரிவிலிருந்த பி.அருண்குமார் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா பிறப்பித்திருக்கிறார்.

மகேஸ்வரியை கைது செய்தபோது...

அதேபோல, அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு எஸ்.ஐ-க்கள் உட்பட மேலும் 29 காவலர்களும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். யார் யார் எந்தெந்த காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

1. சப் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் - திருப்பத்தூர் நகரக் காவல் நிலையம்.

2. சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் - ஆம்பூர் நகர காவல் நிலையம்.

3. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி - திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையம்

4. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தயாளன் - அம்பலூர் காவல் நிலையம்

5. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்

6. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்

7. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் - அம்பலூர் காவல் நிலையம்

8. தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

9. தலைமைக் காவலர் சங்கர் - நாட்றம்பள்ளி காவல் நிலையம்

10. தலைமைக் காவலர் பார்த்தசாரதி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

11. தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன் - நாட்றம்பள்ளி காவல் நிலையம்

12. தலைமைக் காவலர் அண்ணாதுரை - நாட்றம்பள்ளி காவல் நிலையம்

13. தலைமைக் காவலர் முனுசாமி - உமராபாத் காவல் நிலையம்

14. தலைமைக் காவலர் சிவகுமார் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்

15. தலைமைக் காவலர் சரவணன் - ஆம்பூர் நகரக் காவல் நிலையம்

16. முதல்நிலைக் காவலர் பாஸ்கர் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

17. பெண் முதல்நிலைக் காவலர் பாரதி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

18. முதல்நிலைக் காவலர் ஞானசேகரன் - அம்பலூர் காவல் நிலையம்

19. பெண் காவலர் சிவகாமி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

20. காவலர் செந்தில்குமார் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

21. காவலர் பெருமாள் - அம்பலூர் காவல் நிலையம்

22. காவலர் அருண்குமார் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்

23. காவலர் ராஜசேகர் - கந்திலி காவல் நிலையம்

24. காவலர் வினோத் - அம்பலூர் காவல் நிலையம்

25. காவலர் அன்பரசன் - அம்பலூர் காவல் நிலையம்

26. பெண் காவலர் சுஷ்மா - திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையம்

27. காவலர் ஏழுமலை - ஆலங்காயம் காவல் நிலையம்

28. காவலர் தினேஷ்குமார் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்

29. காவலர் ராஜ்குமார் - ஆலங்காயம் காவல் நிலையம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/nh6FbTe
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*