சனல் குமார் சசிதரன் ஒழிவு திவசத்தே களி, செக்ஸி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சு வாரியர் நடித்த Kayattam என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக அவரது பேஸ்புக் பதிவில், ``மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து. அவர் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை" எனப் பகிர்ந்திருந்தார்.
மேலும், Kayattam படப்பிடிப்பின்போதுகூட மஞ்சு வாரியரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பினேஷ் சந்திரன், பினு நாயர் என்கிற இருவரும் மஞ்சு வாரியரின் மேனேஜர்களாக அறிமுகமாகி படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூசர்களாக மாறினர். இவர்களின் கட்டுப்பாட்டில்தான் மஞ்சு வாரியர் இருப்பதாகவும், 2017 நடிகை தாக்குதல் வழக்கில் மஞ்சு வாரியரின் வாக்குமூலம் கேட்கப்பட்ட பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்றும் இயக்குநர் சனல்குமார் பதிவிட்டிருக்கிறார்.
நகை கடை ஒன்றின் திறப்பு விழாவிற்காக கோட்டயத்திற்கு மஞ்சு வாரியர் வந்தபோது அவரைச் சந்திக்க சனல் குமார் முயற்சி எடுத்ததாகவும் அதனை மஞ்சு வாரியரின் மேனேஜர்கள் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது பதிவில், ``படத்தின் ரிலீஸ் சிலரால் தடுக்கப்படுவதைப் பற்றி மஞ்சு வாரியரிடம் பேச முற்பட்டேன். மறுநாள் மஞ்சு வாரியர் எனக்கு அழைத்தபோது நான் பேசும் மனநிலையில் இல்லை. மீண்டும் நான் பல முறை அழைத்தும் பதில் இல்லை. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் சிறிய குறிப்பு ஒன்றை வெளியிட்ட மறுநாள் போலீஸ் தரப்பில் இருந்து பேசுவதாகக்கூறி எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், `மஞ்சு வாரியர் உங்கள்மீது புகார் கொடுத்திருக்கிறார்' எனக் கூறினர். இது எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது" என சனல் குமார் பதிவிட்டுள்ளார்.
"மஞ்சு வாரியரின் அமைதி, சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது. WCC-க்கு (மலையாள சினிமாவில் இயங்கும் பெண்களுக்கான அமைப்பு) நான் மெயில் அனுப்பியிருக்கிறேன். தேசிய அளவில் பிரபலமான நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான இந்த பிரச்னை சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்" என்கிற கோரிக்கையையும் வைத்துள்ளார்.
from தமிழ் சினிமா https://ift.tt/wXvoutd
via Umn news Tamil
