Shah Rukh Khan: `சீரியல் ஆர்டிஸ்ட் டு பாலிவுட் சூப்பர் ஸ்டார்' ஷாருக் கானின் பிறந்தநாள் பகிர்வு!

0

பாலிவுட் சூப்பர் ஸ்டார், கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று அழைக்கப்படுபவர்  நடிகர் ஷாருக்கான்.

டெல்லியில் பிறந்த இவர் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து, படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர்.

 1988ம் ஆண்டு டிவி நடிகராக நடிப்புத் துறைக்கு அறிமுகமான ஷாருக்கான், ‘தில் டரியா’,‘ஃபௌஜி’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார். 

பின் 1992ம் ஆண்டு 'தீவானா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு அதே ஆண்டு 3  படங்கள் வெளியாகின. 

அந்த ஆண்டே  பாலிவுட் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான  விருதை அவர்  பெற்றார். 

முதலில் வில்லனாக அறிமுகமான  இவர் பிறகு ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார்.  

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ஷாருக்கானுக்கு தி வேர்ல்ட்ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது.

30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற இவர், இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

நடிப்பு மட்டுமின்றி திரைப்படத் தயாரிப்பிலும் கால்பதித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். 

கடந்த 2018-ம் ஆண்டு கடைசியாக `ஜீரோ' என்ற படம் ஷாருக்கான் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு எந்தப் படமும் வெளியாகாத நிலையில் தற்போது 'பதான்' படமும் அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 'ஜவான்' படமும் வெளியாகவுள்ளது. 

பாலிவுட் திரையுலகில் சாதாரணக் கலைஞனாக அடியெடுத்து வைத்து, உலகின் அனைத்து திரையுலகமும் தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கானிற்கு இன்று 57 வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.  



from தமிழ் சினிமா https://ift.tt/X0nowvf
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*